ஜெர்மனியில் நடைபெற்ற சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் பிரிவில் சென்னை சிறுமி பூஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டிப் போட்டிகள் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 198 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 190 நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பூஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.