மாதம் ரூ.90,000 சம்பளம்.. என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’.. NTPC என்டிபிசியில் சூப்பர் வேலை
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசி நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.90 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்டிபிசி(NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (National Thermal Power Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி, மாநிலங்களுக்கான மின்பகிர்மானம் தொடர்பான பணிகளை செய்து வருகிறது.
மேலும் மின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை, மின்உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: காலியிடங்கள்: என்டிபிசி நிறுவனத்தில் எக்ஸிக்கியூட்டிவ் (Executive) பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பொதுப்பிரிவினர் 22 பேர், இடபிள்யூஎஸ் பிரிவை சேர்ந்த 5 பேர், ஓபிசி பிரிவை சேர்ந்த 11 பேர், எஸ்சி பிரிவை சேர்ந்த 8 பேர், எஸ்டி பிரிவை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் தங்குமிடம்/எச்ஆர்ஏ வழங்கப்படும். அதோடு இரவு ஷிப்ட் என்றால் அலோவன்ஸ் வழங்கப்படம். இததவிர உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் பணியாளர், மனைவி, 2 குழந்தைகளுக்கான மருத்துவ வசதி செய்து தரப்படும். விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ntpc.co.in இணையதளம் மூலம் நவம்பர் மாதம் 10ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிஇ, எக்எஸ்எம் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here