தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (12.12.2023) தலைமைச் செயலகத்தில், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1.25 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், டாக்டர் சேகர் விஸ்வநாதன், டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோர் உள்ளனர்.