ரூ.50,000 வரை ஊதியம்.. சென்னை ஐஐடியில் வேலை.. பிஇ, பிடெக், டிகிரி, டிப்ளமோ படித்தவருக்கு வேலை
சென்னை ஐஐடியில் டெக்னீசியன்/ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு டிகிரி, டிப்ளமோ, பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: காலியிடங்கள்: சென்னை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் துறையில் காலியாக உள்ள டெக்னீசியன்/ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.16,000 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்கப்படும். கல்வி தகுதி: இந்த பணிக்கு பிஇ, பிடெக், பிஸ்சி, பிசிஏ படிப்பை பர்ஸ்ட் கிளாசில் முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் டிப்ளமோ, ஐடிஐ, ஏதாவது ஒரு இளங்கலை/முதுகலை டிகிரி படித்தவர்கள் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பைத்தான் ப்ரோகிராமில் நல்ல அறிவு பெற்றிருப்பது அவசியம். அதோடு சி++ தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் முதலில் ஓராண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் செயல்பாட்டை பொறுத்து நீட்டிப்பு செய்யப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://icandsr.iitm.ac.in/recrecruitment/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் மாதம் 2 ம் தேதி கடைசி நாளாகும். சந்தேகங்கள் தீர்க்க: விண்ணப்பம் செய்யும்போது கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய recruitment@imail.iitm.ac.in/icsrrecruitment@iitm.ac.in எனும் இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 044-2257 9796 எனும் தொலைபேசி எண்ணை பணி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here