மதுரை: மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள கிளர்க், உதவியாளர், செயலாளர், ஜூனியர் உதவியாளர், சூப்பர்வைசர், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 75 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமா ரூ.54 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் மாவட்டம் வாரியாக பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி மாநிலத்தில் மொத்தம் 2,257 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டம் 75 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு எழுத்தர் (கிளர்க்) பணிக்கு 4 பேர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ‛பி’ பிரிவு எழுத்தர் பணிக்கு 10 பேர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ‛சி’ பிரிவு எழுத்தர் பணிக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட உள்னர்.
மேலும் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உதவியாளர் பணிக்கு 8 பேர், நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 9 பேர், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் மேற்பார்வையாளர் பணிக்கு பேர், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் உதவியாளர் பணிக்கு 10 பேர், கூட்டுறவு அச்சகத்தில் எழுத்தர் பணிக்கு 3 பேர், கூட்டுறவு ஒன்றியம் எழுத்தர் ஒருவர் என மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாதசம்பளம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு எழுத்தர் (கிளர்க்) பணிக்கு ரூ.16,000 முதல் ரூ.54 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ‛பி’ பிரிவு எழுத்தர் பணிக்கு ரூ.12,200 முதல் ரூ.33,580 வரையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ‛சி’ பிரிவு எழுத்தர் பணிக்கு ரூ.10,050 முதல் ரூ.29,940 வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் ணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உதவியாளர், நகர கூட்டுறவு கடன் சங்கம் உதவியாளர் பணிக்கு 15,000 முதல் ரூ.47,600 வரையும்,
நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு ரூ.11,900 முதல் ரூ.32,450 வரையும், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இதுதுவிர நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் உதவியாளர் பணிக்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.45,100 வரையும், கூட்டுறவு அச்சகத்தில் எழுத்தர் பணிக்கு ரூ.11,500 முதல் ரூ.67,760 வரையும், கூட்டுறவு ஒன்றியம் எழுத்தர் பணிக்கு ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மிஸ் பண்ணாதீங்க.. கைநிறைய சம்பளம்.. சென்னை என்ஐஆர்டி-யில் அசத்தலான வேலை.. செம வாய்ப்புமிஸ் பண்ணாதீங்க.. கைநிறைய சம்பளம்.. சென்னை என்ஐஆர்டி-யில் அசத்தலான வேலை.. செம வாய்ப்பு
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது மேற்கூறிய தேதிக்குள் முன்பு பிறந்தவராக விண்ணப்பத்தாரர்கள் இருக்க கூடாது. பொதுப்பிரிவினர் என்றால் 32 வயதும், பொதுப்பிரிவை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் என்றால் 50 வயதுக்குள்ளும், பொதுப்பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கணவர் இல்லாத பெண்கள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு என்பது கிடையாது.
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்து கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவு பயிற்சி உள்ளிட்டவற்றை முடித்திருக்க வேண்டும்.
ரூ.43,000 மாதஊதியம்.. நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. கோவை ஆவினில் சூப்பர் வேலை! ரூ.43,000 மாதஊதியம்.. நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. கோவை ஆவினில் சூப்பர் வேலை!
இதுதவிர புனே வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம், பிகாம் (ஆனரஸ்) கூட்டுறவு, எம்காம் (கூட்டுறவு), எம்ஏ (கூட்டுறவு), பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏேதும்ன பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவு முதுநிலை பட்டப்படிப்பு, பிஏ (கூட்டுறவு), பிகாம் (கூட்டுறவு) படித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
இல்லாவிட்டால் 10, 12ம் வகுப்பு முறைப்படி பள்ளியில் முடித்து 15 ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்கும் முன்னாள் வீரர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் கூட்டுறவு சார்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
கைநிறைய சம்பளம்.. கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்ககைநிறைய சம்பளம்.. கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.drbmadurai.net இணையதளம் மூலம் டிசம்பர் 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு என்பது டிசம்பர் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் நடக்கும். இதில் விண்ணப்பத்தாரர்களின் செயல்பாடுகளை பொறுத்து அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here