உலகின் சைவ நாடுகள் : முதலிடத்தை பிடித்த இந்தியா.
உலகில் சைவம் மற்றும் அசைவ பிரியர்கள் உள்ள நாடுகள் குறித்து, வெளியான பட்டியலில், நம் நாடு முதலிடம் பிடித்துள்ளது.
உலகளவில் சைவம், அசைவம் என, இரு வகையான உணவு நுகர்வு முறைகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
இதில், இந்தியாவில் மட்டுமே சைவ உணவு நுகர்வில், பந்தியளிக்கும் முறை உள்ளது.
இதற்கு, பறைசாற்றும் விதமாக, உலகளவில் சைவபிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், நம் நாடு முதலிடம் பிடித்துள்ளது.
பல்வேறு தளங்களில், புள்ளி விபரங்கள் வெளியிடும், உலக அளவிலான அமைப்பு வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்பதில்லை என, தெரியவந்துள்ளது.
அடுத்தபடியாக, மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவம் உண்பவர்களாகவும், தைவானில், 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும் சைவ உணவுகளை உண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலியாவில், 12.1 சதவீதம் பேரும், ரஷ்யாவில், 1 சதவீதம் பேரும் சைவம் உண்பது தெரியவந்துள்ளது.
இதன் வாயிலாக, 99 சதவீத அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன், ரஷ்யா அசைவ உணவு பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளது.
தவிர, அமெரிக்கா மற்றும் சீனாவில் 5 சதவீதம் பேர் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை எனவும், ஜப்பானில் 9 சதவீதம் பேர், இங்கிலாந்தில், 10 சதவீதம் மக்கள், அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை எனவும், பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.