பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை துவக்கியுள்ளது.
நாடு முழுதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், அதில் ஆதார், பான் உள்ளிட்ட தகவல்களை இணைக்க வேண்டும் என்றும், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.
முதல்கட்டமாக, பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை கணினி வாயிலாக வழங்கும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து, பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை முடிவு செய்தது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டாவில் தற்போது இடம் பெறும் விபரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி செய்ய, இது போதுமானதாக இல்லை.
எனவே, பட்டா உள்ளிட்ட ஆவணங்களில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம்.
ஒரு நபர் பெயரில் எத்தனை சொத்துக்கள் இருக்கின்றன என்பதை, அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும்.மேலும், நில அபரிப்பு போன்ற மோசடிகளை தடுக்கவும் இது உதவும்.
இதனால், புதிதாக பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போரிடம் ஆதார் விபரம் பெறும் பணிகள் துவங்கியுள்ளது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.