மின்வாரியம் அதிரடி.. வரும் 24ம் தேதி ரெடியா இருங்க மக்களே.. பெயர் மாற்றம் செய்யணுமா? வந்தது அறிவிப்பு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை மின்வாரியம் செய்து வரும்நிலையில், இன்னொரு அறிவிப்பினையும் தற்போது வெளியிட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்புகூட, மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில், “தொடர்ச்சியாக மின் தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, காரணத்தை கண்டறிந்து, உடனே சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அமைச்சர் அறிவிப்பு: தொடர்ந்து அமைச்சர் கூறும்போது, “மக்கள் தெரிவிக்கும் புகார் மீது, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழை காலத்தில், சீராக மின் வினியோகம் செய்ய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலம் முழுதும், 43,244 கம்பங்களை மாற்றுவது, 20,570 இடங்களில் மின் மின் கம்பியை சரிசெய்வது என்று மொத்தம், 3.89 லட்சம் பணிகள் நடக்க வேண்டும்.
அவற்றை முறையான திட்டமிடலுடன் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, அதிக நேரம் மின் தடை ஏற்படாமல் செய்ய வேண்டும். மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், வரும் 24ம் தேதி முதல் நடத்த வேண்டும்” என்று அறிவித்திருந்தார்.
மின்வாரியம் தயார்: அமைச்சர் இவ்வாறு அறிவித்திருந்த நிலையில், அதற்கான முகாம்களை நடத்த மின்வாரியம் தயாராகிவருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்பு, பொது மின் இணைப்புதாரர்களுக்கு சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். வரும் 24 முதல் ஒரு மாதத்துக்கு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாம்.
மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க ஏற்பாடு செய்துள்ளதால், இந்த முகாம் மூலம் பயனாளிகள் பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
வீடுகளில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி பில் வருமா? மின் வாரியம் விளக்கம்!வீடுகளில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி பில் வருமா? மின் வாரியம் விளக்கம்!
அதில், “தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” ஒன்றினை வருகின்ற திங்கட்கிழமை (24.07.2023) முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் தயார்: தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.
இருப்பினும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” ஒன்றினை வருகின்ற திங்கட்கிழமை (24.07.2023) முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை: இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்படும்.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726/- (ரூ 615+GST ரூ 111) செலுத்தி இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval