மதுரை முனியாண்டி விலாஸ் கார சட்னியின் ரகசியம் இதுதாங்க. இப்படி ஒரு கார சட்னியை இதுவரைக்கும் வாழ்நாளில் நீங்க ருசித்து இருக்கவே மாட்டீங்க.
எப்போதும் ஒரே மாதிரி பொட்டுக்கடலை சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, சாப்பிடுவதைவிட கொஞ்சம் வித்தியாசமாக இது போன்ற காரச்சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த கார சட்னியை சுலபமாக அரைக்கலாம். இதை முனியாண்டி விலாஸ் மதுரை காரச் சட்னி என்று சொல்லுவார்கள். சுட சுட இட்லிக்கு மேல், இந்த சட்னியை ஊற்றி சாப்பிட்டால் கொள்ளை சுவை இருக்கும். இட்லிக்கு காரசாரமான சைட் டிஷ் பிடிக்கும் என்பவர்கள் இந்த ரெசிபி கட்டாயம் மிஸ் பண்ணாம முயற்சி செய்து பார்க்கவும்.
மதுரை முனியாண்டி விலாஸ் கார சட்னி செய்முறை: முதலில் அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் தோல் உரித்த பூண்டு பல் 10, வரமிளகாய் 6, நறுக்கிய வெங்காயம் மீடியம் சைஸில் இருப்பது 1, இவைகளையெல்லாம் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் வந்தவுடன், புதினா இலை 10, மல்லித்தழை மிகக் குறைந்த அளவு, போட்டு வதக்கங்கள். சட்னி பச்சை நிறத்தில் மாறக்கூடாது. சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். வாசனைக்காகத்தான் மல்லி தழையும், புதினா தழையும் சேர்க்க போகின்றோம். ஆக அதை மிகக் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து இதோடு 1/4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், பொட்டுக்கடலை 2 டேபிள் ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த சட்னியை தாளிக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுந்து, போட்டு தாளிக்கவும். உளுந்து சிவந்து வந்தவுடன் மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன், அளவு போட்டு வதக்குங்கள். வெங்காயம் கொஞ்சம் மொறுமொறுப்பாக வரட்டும்.
பிறகு கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு அரைத்திருக்கும் இந்த சட்னியை அந்த தாளிப்பில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: இட்லி மீந்து போனால் வேஸ்ட் பண்ணாம இட்லி உப்புமா அல்ல இட்லி மஞ்சூரியன் டேஸ்ட்டியாக சுட சுட இப்படி கூட செய்யலாமே! இந்த சட்னி கொஞ்சம் தண்ணீராக இருந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
ஒரே ஒரு நிமிடம் அந்த சட்னி கொதி வந்ததும், நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சுட சுட இட்லிக்கு மேல் சுட சுட இந்த சட்னியை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட். இந்த சட்னிக்கு காரம் கூடுதலாக இருந்தால் தான் ருசி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.