மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் புதிய காரிய முயற்சிகளில் இழுபறி உண்டாகும். அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். உறவினர்கள் வழியில் தனலாபம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்துடன் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
மிதுனம்: மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும், மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மனநிறைவான பொருள் வரவு இருக்கும்.
கடகம்: கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத சோதனைகள் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு தாமதங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை.
சிம்மம்: சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசாங்க வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய மனிதர்கள் நட்பு நன்மைகளை கொடுக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி: கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் எச்சரிக்கை அவசியம். புதிய மனிதர்களிடம் காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.
துலாம்: துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்கள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சொத்து விவகாரங்களில் இழுபறி உண்டாகும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளால் லாபங்கள் இருக்கும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். மக்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.
தனுசு: தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பெறுவார்கள். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்: மகர ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை பெருகும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று மன அமைதி பெறுவார்கள்.
கும்பம்: கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரம் விரிவு பெற்று லாபங்கள் பெருகும். பழைய கடன் தொகைகளை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். சிலருக்கு சுபகாரிய விரயங்கள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை.
மீனம்: மீன ராசியினருக்கு இன்றைய தினம் வாழ்க்கை துணையுடன் அன்னோன்யம் கூடும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். கவலைகள் நீங்கும்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும்
தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.