#ஆடிக்__கிருத்திகை …
கந்தபுராணம் கூறும்
#கிருத்திகைவிரதம்_முறை ….
ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் வரலாற்றை கூறும் உன்னத நூல் கந்தபுராணம் ..
இந்நூலில் ஸ்ரீ கச்சியப்பசிவாச்சாரியர் முருகனின் முக்கிய விரதங்களில் ஒன்றான #கிருத்திகைவிரதம் எவ்வாறு கொள்வது என பாடியருளியுள்ளார் …
ஒரு முறை நாரதமுனிவர் விநாயகப்பெருமானை வேண்டி கந்தனை வேண்டி வழிபட விரதம் கொள்ள உகந்தநாள் எது? அந்த விரதம் எவ்வாறு மேற்கொள்வது என வினவ ….
அப்பொழுது ஸ்ரீ விநாயகர் உரைக்கின்றார் …..
“முன்னவன் அதனைக்கேளா முழுதருள் புரிந்து நோக்கி,
அன்னது பெறுதி திண்ணம் ஆறுமாமுகத்து நம்பி,
பொன்னடி வழிபாடாற்றிப் பொருவில் கார்த்திகைநாள் நோன்பை,
பன்னிரு வருடம் காறும் பரிவுடன் புரிதி என்றான். ”
நாரதனே அறுமுகசிவமாகவும் ஆறுமுகங்களை கொண்ட நம்பியான கந்தனின் திருவடிகளை மனதார போற்றி, நிகரில்லாத கிருத்திகை நட்சத்திர நாளில் இவ்விரதத்தை #பன்னிரண்டு ஆண்டுகள் அன்புடன் மேற்கொள்ளவேண்டும் .இவ்வாறு விரதம் கொள்வோர் விரும்பியதை அடைவது திண்ணம் என்றார்.
இதனை கேட்ட நாரதமுனிவர் இவ்விரதத்தை நான் மேற்க்கொள்வேன் என்று பூவுலகிற்க்கு வந்தார் …வந்து,
“நாரதன் வினவி ஈது நான்புரிந்திடுவன் என்னாப்,
பாருலகதனில் வந்து பரணிநாள் அபாரணத்தில்,
ஓர்பொழுது உணவு கொண்டே ஒப்பில் கார்த்திகைநாள் தன்னில்,
வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்றல் உற்றான் .”
அதன்படி, கிருத்திகைக்கு முதல்நாளாகிய #பரணிநாளில் ஓர் பொழுது உணவு கொண்டு ,மறுநாள் தமக்குநிகரில்லாத கார்த்திகை நாளில் முழுமையாக உபவாசம் விரதம் கொண்டு வீரவேல் பெருமானாகிய கந்தக்கடவுளை போற்றிவந்தார் .
இவ்வாறு கிருத்திகைநாளில்,
நித்ய இயமநியமங்களை முடித்து, ஐம்புலன்களை அடக்கி குமரனின் திருவடிகளை தலைமேற் கொண்டு போற்றி, அப்பெருமானின் புராணங்களை பாராயணம் செய்தும் கேட்டும் உணர்ந்தும் வந்தார் .
கிருத்திகை அன்று இரவு தருப்பை பாயில் கிடந்து ,முருகன் திருவடியே சிந்தையாகக் கொண்டு இரவு முழுவதும் உறங்காது இருந்தார் …
“அந்தநாள் சென்றபின்னர் உரோகிணி அடைந்த காலைச்,
சந்தியா நியமம் எல்லாஞ் சடக்கென முடித்துக்கொண்டு,
கந்தவேள் செம்பொன் தண்டைக்கான் முறை வழிபட்டேத்தி,
வந்த மாதவர்களோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான். ”
இதன்படி, கிருத்திகை நாள் இரவு முழவதும் உறங்காது இருந்து, மறுநாள் ரோகிணி நாளில் அதிகாலை அன்றைய சந்தி நியமங்களை எல்லாம் முடித்துக்கொண்டு,
தண்டையும் சலங்கையும் உடைய முருப்பெருமானது திருவடிமலர்களை வணங்கி பின் தம்மோடு வந்த அன்பர்களோடு #பாரணம் செய்தார்.
(#பாரணம் – உபவாசமிருந்து விரதமுடிவில் உண்ணுதல்).
பாரணம் முடித்த அன்று பகல்பொழுது உறங்காமல் இருக்கவேண்டும் …….
“விழியோடு இமைகூடாமெ வெய்யவன் குடபால் வீழும்,
பொழுதன விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி,
அழிவறு விரதம் இவ்வாறு ஆறிருவருடம் இயற்றி,
எழுவகை முனிவோருக்கும் ஏற்றமாம் பதத்தைப் பெற்றான்” ….
இதன்படி ரோகிணி நாள் பாரணம் அன்று பகலில் விழித்திருந்து, சூரியன் மேற்க்கு திசையில் மறைந்தபின் சாயங்கால நியமங்களை பூர்த்தி செய்து ,முருக வழிபாடோடு இவ்விரதத்தை பூர்த்தி செய்யதார் … …
இவ்வாறு அழிவற்ற கிருத்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் மேற்க்கொண்டு எழுவகை முனிவர்களுக்கும் மேலான பதவியை நாரதர் பெற்றார் ….
இவ்வாறு கிருத்திகை விரதம் விதிப்படி கொண்டு ,மூன்று உலகங்களில் உள்ள விரும்பும் பேறுகளையும் ,புண்ணியத்தையும் அடையமுடியும் …
கந்தபுராணம் கூறும் இந்த விதிப்படி
1)கிருத்திகைக்கு முதல்நாள் பரணியில் ஒரு பொழுது உணவு …
2) கிருத்திகை அன்று முழு உபவாசம் …….அன்று இரவு உறங்காமை .
3) கிருத்திகை மறுநாள் ரோகிணியில் அதிகாலை பாரணம் ….பகல்பொழுது உறங்காமை + மாலையில் முருகர் வழிபாடோடு விரதம் பூர்த்தி என மூன்று நாள் விரதமாக கொள்ளவேண்டும் …
#கிருத்திகாதின_நாயகா சரணம்..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா .
குஹார்ப்பணம்
#ஸ்ரீகந்தபுராணஞானஸபை.
#கந்தபுராணம்
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.