இன்று தமிழ்நாடு அரசியலே மாறப்போகுது! ஸ்டாலின் இங்கே.. எடப்பாடி அங்கே.. நடுவில் ஓபிஎஸ்.. என்னங்க இது?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் இன்று ஒரே நாளில் நடக்க போகும் 3 முக்கிய சம்பவங்கள் கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நெருங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஏற்கனவே பாஜக பணிகளை செய்து வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தமிழ்நாடு முழுக்க நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் வரும் இன்று.. திமுக, அதிமுக, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அரசியல் ரீதியாக மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர். ஒரே நாளில் இவர்கள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் அதிக கவனம் பெற்றுள்ளன.
அதிமுக கூட்டம்: மதுரையில் இன்று நடக்க உள்ள அதிமுக மாநாட்டிற்காக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறாராம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஏற்கனவே இந்த மாநாட்டிற்கான ஜோதி ஓட்டம் சென்னையில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காலை காலை 8 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கார்களில் மட்டும் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
விடாத ஓ பன்னீர்செல்வம்! சரியாக எடப்பாடி கூட்டம் நடத்தும் நாளில்.. அஸ்திவாரத்திலேயே ஷாக் தரும் ஓபிஎஸ்விடாத ஓ பன்னீர்செல்வம்! சரியாக எடப்பாடி கூட்டம் நடத்தும் நாளில்.. அஸ்திவாரத்திலேயே ஷாக் தரும் ஓபிஎஸ்
ஓபிஎஸ் கூட்டம்: அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம். எடப்பாடி கூட்டம் நடத்தும் அதே நாளில் அதாவது இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ பன்னீர்செல்வம் நடத்துகிறார்.
அதே நாளில் கோவையில் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட உள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம்.
அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று லாபி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.
திமுக போராட்டம்: அதே நாளில் திமுக சார்பாக நீட் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளது. நீட்டை எதிர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி செயலாளர்கள் சார்பாக இந்த உண்ணாவிரதம் நடக்க உள்ளது. சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் மாநில செயலாளர்கள், தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம் என்றும் திமுக அழைத்துள்ளது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.