சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் களமிறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய பிரபாகரனும் தான் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்கின்றனர். கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் விஜய பிரபாகரன் தான் கலந்துகொள்கிறார்.
அவருக்கு இன்னும் தேமுதிகவில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியையும், கட்சி நிர்வாகிகளையும் தயார்படுத்தும் பணிகளை பிரேமலதா விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் கவனித்து வருகின்றனர்.
உதயநிதி கூப்டா வரனும்மா? அவரு என்ன தலைவரா? – கோவை சத்யன்
அண்மைக்காலமாக என்ன காரணம் எனத் தெரியவில்லை, எல்.கே.சுதீஷை அதிகம் கட்சி நிகழ்வுகளில் பார்க்க முடிவதில்லை. விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கூட அவரை காண முடியவில்லை. இந்தச் சூழலில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக எந்தக் கூட்டணியில் இருக்கிறது என்ற விவரமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் விஜயகாந்த் மகன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற விவரமும் கிடைக்கப்பெற முடியவில்லை. வெற்றியோ தோல்வியோ தேர்தல் அரசியலில் களமிறங்குவது என்ற முடிவில் விஜய பிரபாகரன் உள்ளதாக தெரிகிறது. இதனால் தேமுதிகவில் பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.