பருப்பு இல்லாத சாம்பாரை வெறும் 10 நிமிடத்தில் இப்படி கூட வைக்கலாமா? அவசரத்துக்கு இட்லி தோசைக்கு சைடிஷ் எதுவும் இல்லாத சமயத்தில், இந்த சாம்பார் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.
பருப்பு வேகவைத்து சாம்பார் வைக்க முடியாத சமயத்தில், இப்படி ஒரு இன்ஸ்டன்ட் சாம்பாரை முயற்சி செய்யலாம். அல்லது பருப்பு சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்குது. கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சைடு டிஷ் செய்தால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கும் போதும் இந்த சாம்பார் ரெசிபி ட்ரை பண்ணலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான ஒரு சைடு டிஷ். சுலபமாக செய்யக்கூடிய சைட் டிஷ்ம் கூட. வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.
பருப்பு இல்லாத இன்ஸ்டன்ட் சாம்பார் செய்முறை: இதற்கு முதலில் நாம் ஒரு பொடியை வறுத்து அரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சீரகம் 1/4 ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், வர மல்லி 1 ஸ்பூன், வர மிளகாய் 5, பொட்டுக்கடலை 1 கைப்பிடி போட்டு, எல்லா பொருட்களையும் வறுத்துக் கொள்ளவும். மசாலா லேசாக வாசம் வரும்போது அடுப்பை அணைத்து, இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இது அப்படியே இருக்கட்டும். (எல்லா பொருட்களும் சரியான அளவில் வருபட வேண்டும். வருபடும் போது மசாலா பொருட்கள் கருகிவிட்டால் சாம்பாரின் ருசி மாறிவிடும். ஒவ்வொரு பொருட்களாக தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொண்டாலும் சரிதான்.) – Advertisement – Advertisement: 0:56 Close Player அடுத்து பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த புளி தண்ணீர் திக்கான கரைசலாக இருக்கக் கூடாது. ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரில் புளிக்கரைசல் நமக்கு தேவை. புளிக்கரைசல் நீர்க்க இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு இடித்த பூண்டு பல் ஐந்தாறு சேர்த்து, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 1, நீளவாக்கில் நறுக்கிய தக்காளிப் பழம் 2 சேர்த்து, கருவேப்பிலை 1 கொத்து போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். –
வெங்காயம் தக்காளி வதங்கி வந்த உடன் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், போட்டு கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை இதில் ஊற்றுங்கள். தேவை என்றால் கொஞ்சம் தண்ணீரும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு தூவி, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை இதில் சேர்த்து கலந்து விட்டால் சாம்பார் கொதிக்க கொதிக்க திக்காக தொடங்கும்.
இதையும் படிக்கலாமே: ஒரு கப் ரவை இருந்தா உளுந்தே சேர்க்காமல் உளுந்த வடைய நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்பியா அதுவும் சட்டுனு செஞ்சிடலாம். இனி மெதுவடை சாப்பிடும் ஆசைப்பட்டா காத்திருக்காம உடனே இப்படி சுட்டு சாப்பிடுங்க. பச்சை வாடை போக சாம்பார் கொதி வந்தவுடன் இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி, சுடச்சுட பரிமாறி பாருங்கள். உங்களுக்கு இதனுடைய டேஸ்ட் தெரியும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணலாம்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.