சுமார் 400 ஆண்டுகள் அன்னியப் படையேடுப்புகளால் வழிபாடுகள் நடைபெறாமல் இருந்த,
சப்த ரிஷிகளில ஒருவரான
அத்திரி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ,
1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான,பல வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற
#வேலூர் மாவட்டத்தில் உள்ள
#வேலூர்_கோட்டையில் அமைந்துள்ள
#வேலூர் என்ற #வேலங்காடு
#ஜலகண்டேஸ்வரர்
#அகிலாண்டேஸ்வரிஅம்மன் திருக்கோவில் வரலாறு:
சென்னை பெங்களூர் சாலையில் சென்னையிலிருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழமையான நகரம் இந்த வேலூர்.
இந்த நகரின் பழமைக்குப் பெருமை சேர்க்கிறது நாம் காணும் இந்த கோட்டை. எவரும் கோட்டைக்குள் புக முடியாதபடி அகழி நீரால் சூழப்பட்டு இருப்பதையும், அந்த காலத்தில் அந்த நீரில் இருக்கும் முதலைகள் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் இருப்பதையும் இதனைக் காணும் போது உணர முடியும்.
ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரம் நீண்டு உயர்ந்து காட்சி தருகிறது. வரலாற்றுத் தொடர்புடைய இடங்கள் பல வெறும் சுற்றுலாத்தலமாக விளங்கும். ஆனால் இந்த வேலூர் கோட்டையோ சிறப்புமிக்க ஆன்மீக தலமாகவும் திகழ்கிறது.
கால ஓட்டத்தில் சுல்தான்களின் வசத்திலும், பின்னர் பிரிட்டிஷ் வசத்திலும் இருந்த காலத்தில் கோயிலில் வழிபாடு அற்றுப்போய் சிவலிங்கமும் எடுத்து மறைத்து வைக்கப்பட்டதாம்.
பின்னர் 1981இல் பக்தர்களின் பெரும் போராட்டத்துக்குப் பின்னர், இங்கே ஜலகண்டேஸ்வரர் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.
ஜலகண்டேஸ்வரர் வீற்றிருக்கும் வேலூர் என்ற ஊரானது வேலங்காடு என்ற புராண பெயரைக் கொண்டது. இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அருள் பாவிக்கும் சிவ பெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
இந்தக் கோவிலில் விஷ்ணு மஹாலக்ஷ்மி தாயாருடனும், பிரம்மா சரஸ்வதி தேவியுடனும், சிவபெருமான் பார்வதியுடனும் சேர்ந்து காட்சி தருகின்றனர். மும்மூர்த்திகளையும், முப்பெரும் தேவிகளையும் ஒன்றாக தரிசனம் பெறும் பாக்கியத்தை இந்த கோவிலுக்கு சென்றால் பெறலாம்.
இந்தக் கோவிலில் இருக்கும் கிணற்றில் உள்ள தண்ணீரானது, கங்கை நதிக்கு இணையாக கூறப்படுகிறது. இந்த ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் பின்புறத்தில் காலபைரவர் காட்சி தருகின்றார். கங்கை, சிவன், பைரவர் மூவரையும் ஒன்றாக தரிசிக்கும் அரிதான காட்சியும் இங்குதான் காணப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதாக வரலாறு கூறுகிறது.
மூலவர்: ஜலகண்டேஸ்வரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர் மற்றும் சந்திரசேகரர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வன்னி
தீர்த்தம்: கங்கா பாலாறு,தாமரை புஷ்கரணி
புராண
பெயர்: வேலங்காடு
ஊர்: வேலூர் (கோட்டை)
மாவட்டம்: வேலூர்
மாநிலம்: தமிழ்நாடு
#புராணம், செவிவழிச் செய்திகள்,தலபுராணங்கள் தோன்றிய விவரம்:
18 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டுவந்த சமயம், மக்களிடையே பக்திமார்க்கத்தைப் பரப்பவும் தலபுராணம் னும் நூல்களை உருவாக்கினர். இதன் காரணமாய் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தலபுராணம் இயற்றப் பட்டதைக் காண்கிறோம். தலம் ன்றால் இடம் அல்லது ஊர்ப்புராணம் ன்றால் அவ்விடத்தை அல்லது ஊரைப் பெருமைப்படுத்திக் கூறும் கதை அல்லது வரலாறு. அத்தகையதொரு தலபுராணம் வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலைப் பற்றியும் வரையப்பட்டுள்ளது. இப்புராண வரலாறு செவிவழிச் செய்தியாகவும் உள்ளது. கஜ்ஜம் னும் கையெழுத்துப் பிரதிகளும் இப்புராண வரலாற்றைக் கூறுகின்றன. கி.பி. 1881-ல் ழுதப்பட்ட வடஆற்காடு மாவட்டக் குறிப்பும் புத்தகத்திலும் இத்தல புராணமும் செவிவழிச் செய்தியுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
சமீபத்தில் மறைந்த அருள் மொழியர திருணிருக கிருபானந்த வாரியார் வாமி அவர்கள், சில ஆண்டுக்கு முன் ஒரு பழைய ஓலைச் வடியிலிருந்து இந்த தல புராணத்தைத் தமது திருக்கரங்களாலேயே பிரதி டுத்துள்ளார். இதுவும் அப்புராணக் கதையையொட்டியே அமைந்துள்ளதால் இதையும் கூட நமது நூலின் இப்பகுதிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளோம். சப்தரிஷிகளான வசிஷ்ட்டர், அகத்தியர், கௌதமர், பரத்வாசர், வால்மீகி, காசியபர், அத்திரி என்னும்
ஏழு முனிவர்கள் இவ்வூரிலும்
இதைச் சுற்றிய பகுதிகளிலும் சிவலிங்கங்களை அமைத்துச் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இதில் வசிஷ்ட முனிவர் ஆற்காட்டுக்கு மேற்கில் உள்ள வேப்பூர் னும் வேப்பமரங்கள் நிறைந்த காட்டில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அவ்வாறே அகத்திய முனிவர் வள்ளிமேடு னும் இடத்திலும், கௌதம முனிவர் ஆற்காட்டுக்குக் கிழக்கே உள்ள புதுப்பாடியிலும், வால்மீகி முனிவர் விஷாரம் னும் இடத்திலும், காசியபர் ஆற்காடிலும் சிவலிங்க வழிபாட்டைச் செய்தனர். மற்றொரு முனிவரான அத்திரி ன்பவர் வேலமரங்கள் நிறைந்த வேலூரிலேயே லிங்க வழிபாடு நடத்தினார்.
#முனிவர் பூஜித்த சிவலிங்கம்:
மேற்கூறிய இவ்வேழு முனிவர்களும் இவ்விடத்தை விட்டுச்சென்ற பிறகு, வேலூரில் அத்திரி முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கம் ஒரு சமயம் கரைபுரண்டு ஓடிய பாலாற்று வெள்ளத்தினால் மண்மேடிட்டு மூடப்பட்டது. அதனைச் ற்றி ஒரு குளம் போன்ற நீர்த்தேக்கம் அமைந்திருந்தது. நாளடைவில் லிங்கம் மண்ணில் மறைந்த இடத்தில் புற்றுகள் தோன்றின. அவ்விடமே தற்போதுள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலாக மாறியது. மேற்கூறிய புராண வரலாற்றை அடுத்து, செவிவழிச் செய்தி வரலாற்றைச் சற்றே கவனிப்போம் பொம்மி ரெட்டி, திம்மிரெட்டி பொம்மிரெட்டி, திம்மிரெட்டி இருவரும் ஆந்திரதேசத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பத்ராசலம் னும் ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் ஆவர் இவர்கள் இருவரும் யாதவ நாயுடு என்பவரின் குமாரர்கள் ஆவர். குடும்பத்தில் ஏற்படவிருந்த அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவரும் அறியாமல் ஊரைவிட்டு வெளியேறினர் அவ்வாறு புறப்பட்டவர்கள் இராமேவரம் நோக்கிச் செல்லும் வழியில் வேலூரை வந்தடைந்தனர். இவ்வூருக்கு 8 கி.மீ தொலைவில் உள்ள கைலாசப்பட்டிணம் என்னும் ஊரில் சிற்றரசரான கரிகாலச்சோழன் என்பவரின் அனுமதி பெற்று வேலூரில் குடியேறினர். இங்கு அவர்கள் மாட்டுப் பண்ணை வைத்துப் பொருள் ஈட்டிவந்தனர். அவ்வாறிருக்கையில் ஆரணியைச் சேர்ந்த சிற்றரசன் கரிகாலச்சோழன் நாட்டின் மீது போர்தொடுத்தான். சகோதரர்கள் இருவரும் போரில் கலந்துகொண்டு ஆரணி சிற்றரசனை தோற்கடிக்கத் தங்களுக்கு இடமளித்து ஆதரித்த சோழ அரசனுக்கு உதவினர். அதனால் மகிழ்ச்சியுற்ற கரிகாலன் இவர்களுக்குப் பரிம், பதவியும் பொருளும் வழங்கினார்.
#பவும், பாம்புப்புற்றும்:
இவ்வாறு இருக்கும் சமயம், பொம்மி ரெட்டியிடம் இருந்து மாட்டுப் பண்ணையில், ஐந்துக் கறவைக் காம்புகளைக் கொண்ட வெள்ளைப் ப ஒன்று இருந்தது. அந்தப்ப தினணிம் மேய்ச்சலுக்குப் பின்பு வற்றிய மடியுடன் வீடு திரும்பியது. மாடு மேய்ப்பவன் மீது சந்தேகம் கொண்ட பொம்மி ரெட்டி, ஒரு நாள் மாறு வேடத்தில் அக்கறவையின் பின் சென்று கவனித்தான். அப்ப மாலை வெய்யில் அருகில் இருந்த புதரின் பின்னே மறைந்து சென்றது. இதனை மறைந்திருந்து கண்காணித்த பொம்மி ரெட்டி அங்கு நடப்பவைகளைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அங்கே பாம்புப்புற்று ஒன்றின் அருகே அப்ப நின்றது. புற்றிலிருந்து வெளிக்கிளம்பிய ஐந்து தலைநாகம் ஒன்று அப்பவின் யில் இருந்த ஐந்து காம்புகளிலும் வாயை வைத்துப் பாலை உறிஞ்சிக்குடித்துக்கொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்ணுற்ற பொம்மி ரெட்டி அதிசயித்தவாறு தனது அரண்மனைக்குத் திரும்பினார். அன்றிரவு பொம்மி ரெட்டியின் கனவில் இறைவன் தோன்றி பாம்புப்புற்று இருக்கும் இடத்தில் தனக்குக் கோயிலும் அதைச் ற்றிக் கோட்டையும் அமைக்குமாறு கூறினார். மறுநாள் பொம்மிரெட்டி மந்திரி, பிரதானிகளுடன் பாம்புப்புற்று இருந்த இடத்தை அடைந்து வணங்கினார். ஐந்து தலை நாகம் தோன்றி அரசனுக்குப் புதையல் ஒன்று இருந்த இடத்தையும் ஒரு லிங்கத்தையும் காண்பித்தது. பொம்மி ரெட்டியும், திம்மி ரெட்டியும் புதையலை டுத்து அச்செல்வத்தைக் கொண்டு ஒன்பது ஆண்டுகளில் இக்கோயிலையும், கோட்டையையும் கட்டி முடித்தனர் ன செவிவழிச் செய்தி மூலம் அறிகிறோம்.
#தல_வரலாறு:
சப்தரிஷி அத்திரி, இத்தலத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட காலத்திற்கு பின்பு, லிங்கம் இருக்குமிடம் வேலமரக்காடாக மாறிவிட்டது. லிங்கத்தை புற்று மூடி கொண்டது. பொம்மி என்ற சிற்றரசர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த போது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், புற்றில் மூடப்பட்டிருந்த லிங்கம் இருக்கும் இடத்தை, அந்த சிற்றரசருக்கு கூறி, கோவில் எழுப்பும்படி கூறினார். ஈசனின் கட்டளையை ஏற்ற பொம்மி இந்த கோவிலை எழுப்பினார்.
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஆட்சி மாற்றத்தில் இந்த கோவிலின் கட்டமைப்புகள் நடைபெற்று வந்தாலும், பல காரணங்களால் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இந்த கோவிலில் வழிபாடுகள் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த கோவில்களில் இருந்த சிலைகளை பாதுகாப்பதற்காக ‘சாத்துவாசேரி’ என்ற கிராமத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் சிலைகள் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. 1981-ஆம் ஆண்டு தான் இந்த லிங்கம் மறுமுறை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் நடக்க தொடங்கின.
இந்தத் தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார்.
சிவன் சன்னதியின் பின் புறம், திருப்பதி வெங்கடாசலபதி அமைப்பிலேயே பெருமாள் காட்சி தருகிறார்.
சூரியன், சந்திரனை விழுங்கும், ராகு , கேது மற்றும், தங்க, வெள்ளிப் பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிவமைக்கப் பட்டு உள்ளன.
ஆதி சங்கரர் பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
சித்திரை மாதத்தில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது.
பிராகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் காட்சி தருகிறது.
இதற்கு அருகில் உள்ள சிவபெருமான், கங்கா பாலாறு ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இந்த லிங்கம் லேசாக கூம்பு வடிவில் காணப்படுகிறது. இவரின் பின்புறம், பைரவர் காணப் படுகிறார்.
இவ்வாறு ஒரே இடத்தில் கங்கை, சிவன், பைரவரை காணும் பாக்கியம் தமிழகத்தில் அரிதானது என்பர். இவர்களை ஒரே இடத்தில் வழிபட காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதாக ஐதீகம்!
இவ்வூரில் பாலாறும் பொன்னையாறும் ஓடுகின்றன.
இங்குள்ள மூலவர் ஜலகண்டேஸ்வரரை சுற்றி ஒரு சுற்றுப் பாதையும்
மகா மண்டபமும் வடக்கு முகம் நோக்கிய நடராசர் சிலையும் மற்றும் பல உப தெய்வங்களும் உள்ளன.
இக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் தமிழனின் சிற்பத்திரமையை உள்ளங்கை நெல்லிக்கனியென இவ்வுலகுக்கு பறை சற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது .
உதாரணமாக பிரகாரத்தின் உட்சுவரில் அமைந்துள்ள ஒரு சிற்பம் ஒரே தலையும், இரண்டு உடல்களுமாக இரு வேறு விலங்குகளின் அமைப்பை கொண்டு விளங்குகிறது.அச்சிற்பத்தை ஒரு கையால் ஒரு விலங்கின் உடலை மூடிக்கொண்டு பார்த்தால் யானையாகவும்,மற்றொரு விலங்கின் உடலை மூடிக்கொண்டு பார்த்தால் காளையாகவும் தோன்றும்.
மேலும் ஒரே கல்லில் செய்யப்பட்ட கற்சங்கிலியும், சிங்கத்தின் வாயில் உருளும் கல்லுருண்டையும் பிரம்மிக்க வைக்கின்றன.
இக்கோயில் அம்பாள் சன்னிதியின் எதிரில், ‘அணையா நவசக்தி ஜோதி தீபம்’ இருக்கிறது.
இது 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அங்குல சுற்றளவில் நடுவில் ஒன்றாகவும் சுற்றிலும் எட்டு விளக்காகவும் உருளை வடிவில் அமைந்துள்ளது.
இத்தீபத்தின் வடிவில் அம்பாள் நவசக்திகளாக அருளுகிறாள்.
வெள்ளிக் கிழமைகளில் இந்த விளக்குக்கு மேளதாளத்துடன், சுத்தன்ன நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடக்கிறது.
மேலும் அதிகார நந்திக்கு பின்னால் பலிபீடத்தின் மேல் ஒரு மண் விளக்கு அமைந்துள்ளது.
இதற்கு மேல் பக்தர்கள் தங்கள் கைகளை கொண்டு சென்றால் அது சுழலும் என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு.
ஆனால் அதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை.
மேலும் மதுரையின் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலுள்ள 1000 கால் மண்டபத்தின் அழகை போல் இங்கே அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபமும், வசந்த மண்டபமும் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க முடியாத அளவிற்கு அழகியலை அள்ளி அள்ளி வழங்குகிறது.
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசாட்சியில் இந்தக்கோயில் கட்டமைக்கப்பட்டு வந்தாலும், பல காரணங்களால் கிட்டத்தட்ட 400 வருடங்களாக இங்கே வழிபாடு நடக்கப்பெறவில்லை.
#கோயில்_அமைப்பு:
தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது. அதன் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோயிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் கோயில் சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூணைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம் முழு நீளத்திற்கும் அமைந்துள்ளது. கோயிலின் வடமேற்கில் வசந்த மண்டபத்தையும் அதை ஒட்டி கிணற்றையும் வடகிழக்கில் வெளிப்பிரகார யாகசாலையும் அடுத்து தென்கிழக்கில் உத்சவ மண்டபத்தையும் வெளிப்பிரகார மடப்பள்ளியையும் காணலாம். உள்ளே நுழையும் போது வலம்புாி விநாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
வலம்புாி விநாயகரைத் தாிசித்து மேலே சென்றால் கோயிலின் நிர்வாக அலுவலகம் உள்ளது. இதனைத் தொடர்ந்து உட்பிரகார மடப்பள்ளி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள், பிள்ளையார், சப்தகன்னியர், வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர். இரண்டு பிரகாரங்களை வலம் வந்து மூன்றாம் பிரகாரமான மகாதேவர் சன்னதிக்கு நுழையும் போது நடராஜர் சன்னதி உள்ளது. நடராஜர் சன்னதியிலிருந்து விரிஞ்சிபுரம் அருள்மிகு வழித்துணைநாதர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் வளாகம் அருள்தரும் மரகதவல்லி அம்மையார் சன்னதிக்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது. சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனா உற்சவமூர்த்திகளைக் கண்டு தாிசித்து மேலும் சென்றால், மிக கம்பீரமாகவும் நெடிதுயர்ந்தும் துவாரபாலகர்கள் நின்ற திருக்கோலத்தைக் காணலாம். இவர்களைக் கடந்தால் ஜலகண்டேஸ்வரர் லிங்கத் திருமேனியாக இருப்பதைக் காணலாம். கோயிலின் கிணற்றின் அருகே கங்கா பாலாறு ஈஸ்வரனும், அதன் அருகே கால பைரவரும் அடுத்து, நவக்கிரக சந்நிதியும், சனீஸ்வரரும், நந்திதேவரும் உள்ளனர். அடுத்து கொடி மண்டபமும் உள்ளது. தொடர்ந்து விநாயகர், வெங்கடேசப்பெருமாள், வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, கால பைரவர், சனீஸ்வரர், 63 நாயன்மார்கள், நடராஜர், சிவகாமி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிரம்மா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர்.
#இறைவன், இறைவி:
மூலவர் சன்னதியின் முன்பாக கொடி மரம் மற்றும் பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. அருகில் நந்திதேவர் உள்ளார். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார்.
அம்மன் சன்னதி சுவர்களில், விநாயகர், மாதேஸ்வாி, வைணஷ்ணவி, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்ரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன. அம்பாள் சன்னதியின் இருபுறமும் கம்பீரமாக துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னதியின் எதிரே 1981 ஆம் ஆண்டு மயிலை குருஜி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நவசக்தி ஜோதி என்னும் நந்தாவிளக்குகள் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி கோடி தீபம் என்ற இலக்கை நோக்கி தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
#அமைவிடம்:
வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாம். இதில் கிழக்குப் பக்கத்தில் மட்டுமே நுழைவாயில் உள்ளது. தற்போது கோட்டை அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் பக்கத்தில் தண்ணீர் இல்லை. கோட்டையின் உள்ளே மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ளன. இதன் வடக்குப் பக்கத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட இதன் ஒரு பாணி விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி நிலையைக் கொண்டுள்ளது.
#கல்வெட்டுச்_செய்திகள்:
ஜலகண்டேஸ்வரர் அந்நாளில் ஜ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டுள்ளார். ஜ்வரகண்டேஸ்வரர் என்றால் ஜுரத்தை அழிக்கும் ஈசன் எனப் பொருள். ஜ்வரகண்டேஸ்வரர் என்பது பின்னாளில் மருவி ஜலகண்டேஸ்வரர் என மாறியது.
இக்கோயிலுக்கு அரப்பாக்கம், முருக்கோி, சித்தோி, அரும்பரட்டி, சதுப்போி, சத்துவாச்சாாி, பெருமுகை, சேக்கனூர், சமங்கி நெல்லூர் ஆகிய ஒன்பது கிராமங்களை சின்ன பொம்மு நாயக்கர், விஜய நகரப் பேரரசுவிடம் இருந்து மானியமாகப் பெற்றுத் தந்துள்ளார். இவை அனைத்தும் வேலூருக்கு அருகிலேயே உள்ளன.
கோயிலின் முதல் கோபுர நுழைவாயிலின் இரண்டாவது நிலையில் வலது தூணில் மேற்குப்புறம் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் உயர்ந்து காணப்படுவது சதாசிவ தேவமகாராயர் மன்னராவார். அருகில் உள்ள சிறிய உருவம் சின்ன பொம்மு நாயக்கர் ஆவார். (இவை இரண்டும் இக்கோயிலைக் கட்டிய பொம்மிரெட்டி, திம்மிரெட்டி என பரம்பரையாகக் கூறி வருகின்றனர். இது தவறான தகவலாகும்.)
இக்கோயிலின் உட்பகுதியும், உட்சுவருடன் கூடிய உள்கோட்டைப் பகுதியும் “வென்று மண் கொண்ட சம்புவராயர்” காலத்தில் கட்டப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
பின்பு விஜய நகரப் பேரரசரான சதாசிவ தேவமகாராயரால் (கி.பி.1542, 1565) திருக்கோயிலில் மதில் சுவர்கள், இராஜகோபுரம், கல்யாணமண்டபம் முதலான விாிவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக அறிகிறோம். இத்திருப்பணி நடக்கும் சமயத்தில் சின்ன பொம்மு நாயக்கர் என்னும் பெயருடைய தளபதி அவற்றை மேற்பார்வை செய்து வந்துள்ளார்.
#வேலூர்_கோட்டை
எந்த வகை?
பல வகையான கோட்டைகளில் வேலூர் கோட்டை, வேலங்காடுகள் நிறைந்த கானகப் பகுதியில் தரை மீது அமைக்கப்பட்டதால் வனதுர்கம் ன்ற வகையினைச் சேர்ந்ததாக கூறலாம். அதன் கிழக்குப்புறம் மட்டும் ஒரே வாயிலைக் கொண்டுள்ளதால் ஏகணிகதுர்க்க வகையைச் சேர்ந்தது னவும் கொள்ளலாம்.
#தமிழகத்தின் தலைச்சிறந்த கோட்டை:
தமிழக மலைக்கோட்டைகளில் மிகச் சிறந்தது செஞ்சிக்கோட்டை. தரையில் கட்டப்பெற்ற கோட்டைகளில் சிறந்தது வேலூர் கோட்டை ஆகும். வேலூர் கோட்டையைப் பற்றி நாம் சில தகவல்களை அறிவோம். தென்னிந்தியத் தரைக் கோட்டைகளில் தலைச்சிறந்த கோட்டையும், தரைமீதே கட்டப்பட்டதும், ற்றிலும் அகன்ற ஆழமான அகழியினால் சூழப்பட்டதும், த்தனையோ போர்களில் திரிப் படைகளின் தாக்குதல்களைச் சந்தித்தும் சாயாமல் தலைநிமிர்ந்து நிற்பதுமான இக்கோட்டை கர்நாடகப் போர்களிலும் தமிழக வரலாற்றிலும் முக்கிய பங்கேற்றுள்ளது. ஆகவே, இத்தகைய தனிச்சிறப்பைப் பெற்றுள்ள இக்கோட்டையைப் பற்றி நாம் அறிதல் மிகவும் அவசியமாகும்.
#வேலூர் கோட்டையின் அமைப்பு:
கோட்டையின் வடக்குப்புறம் பெங்களூர், சென்னை பெருவழிச் சாலையும், கிழக்கே ஆரணி சாலையும், மற்ற இருப்பக்கங்களிலும் கூடக் கோட்டையைச் ற்றிய சாலைகளும் இக்கோட்டையின் ல்லைகளாக அமைந்துள்ளது. வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோட்டையும் கோயிலும் சம்புவராயர், நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்குத் தலைச்சிறந்த ஓர் டுத்துக்காட்டாக அமைந்துள்ளன. மார் மூன்று கி.மீ. நீளம் ற்று மதிற்வர்களைக் கொண்டு அமைந்துள்ள இக்கோட்டை, இத்தாலிய நாட்டுப் பொறியியல் நிபுணர்களைக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் சிலர் கணித்துக்கூறியுள்ளனர். பெரிய அளவிலான கற்களைக் கொண்டு கட்டுமான இடைவெளி சிறிதும் இன்றி, அவற்றை அழகாக இணைத்இதன் வர்கள் கலையழகும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாகக் கோட்டையின் வெளிச்வர்கள் கட்டடக்கலை மட்டுமின்றிச் சிற்ப வேலைப்பாடும் சேர்த்து அமைக்கப்பட்டவையாகும். இக்கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில், சுற்றிலும் கோட்டைச் வர்களும், அதையொட்டி அமைந்துள்ள அகழிக்கு அப்பால் பரந்த நிலப்பரப்பைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது
இக்கோட்டையின் பழையவாசல் பல கதவுகளுடன் சாலை வழியும் அதைத் தற்காக்கும் இழுவைப் பாலமும் கொண்டுள்ளது.கோட்டையைச் சுற்றி அகழியும் அதற்குச் செல்லும் கீழ் வழிகளும் கூட உள்ளன. இந்த நுட்பமபன வசதிகளை வைத்துப் பார்த்தால் வேலூர் கோட்டை எந்த அளவு ராணுவ முக்கியத்துவமானது என்பதை அறியலாம். கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழியின் நீளம் 8000 அடியும் ஆழம் 190 அடியிலிருந்து முறையே 20 அடி வரையிலும் உள்ளது. தற்போது இங்கு படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது.
நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் ஆங்கிலேயர்களிடம் இக் கோட்டை கைமாறியது.
1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்தது.
ஆங்கிலேயர்களின்
காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான்குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர் , திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர்,
இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது.
விஜயநகரத்துப் பேரரசன்
ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.
இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது.
நாற்கரவடிவில் அமைந்துள்ள எழில் மிக்க இக்கோட்டையினுள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஹா மகால், கண்டி மகால், இந்திய தொல்பொருள் துறை
அருங்காட்சியகம், கலையம்சத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
1846ல் கட்டப்பட்ட அழகிய புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்ட சதுர வடிவ மசூதி, தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன.
#முத்துமண்டபம்
இலங்கையில் கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான விக்கிரம ராஜசிங் ஆங்கிலேயருடன் நெடுங்காலம் போரிட்டு இறுதியில் சிறை பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் சிறைவாசத்திற்கு பின் இறந்தார்.
அம்மன்னனின் சமாதியில் அமைக்கப்பட்ட நினைவாலயமே முத்துமண்டபம் என வழங்கப்படுகிறது.
முத்துமண்டபம் வேலூர் – காட்பாடி சாலை பழைய பாலத்தின் அருகே பாலாற்றின் தென்கரையில் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து 266km.
கும்பகோணத்தில் இருந்து விருத்தாசலம் வேப்பூர் கூத்தனூர் திருவண்ணாமலை
போளூர் கண்ணமங்கலம் வழியாக வேலூரை அடையலாம்.
பூஜைகள் சிவ ஆகமப்படிப நடைபெறுகின்றது.
பல்லி மேலே விழுந்ததால் பயம் கொண்டவர்கள் இந்தக் கோவிலில் உள்ள வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன பல்லியை வணங்கினால் பயம் நீங்கப்பெறுவர்.
இந்த கோவில் ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனம் என்ற அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கபட்டு வந்தது. இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலை இந்து சமய அறநிலைய துறை இப்போது ஏற்றுள்ளது.
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை,மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
#பலன்கள்:
ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, திருமணத்தில் இருக்கும் தடை நீங்க, பல்லி தோஷம் நீங்க, கண் திருஷ்டி நீங்க இந்த சிவபெருமானை வேண்டிக்கொள்ளலாம்.
#செல்லும்_வழி:
வேலூர் பஸ் நிறுத்தம் அருகில் இந்த கோவிலானது அமைந்துள்ளது.
மனிதனின் முக்கிய தேவையை முன்னிட்டே கோயில்கள் பல உருப்பெறலாயின. இவ்விதம் உருவான கோயில்கள் நாளடைவில் பக்தியை மட்டுமின்றிச் சணிதாய வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பொதுக்கோட்பாடுகளையும் போதிக்கும் மையங்களாகவும் உருவாயின. பாட்டு, பரதம், போன்ற கலைகளும் இக்கோயில்களில் பக்தியுடன் சேர்ந்தே புகட்டப்பட்டன. ஆண்டவனுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்கள், பக்தியுடன் கலைகளையும் சேர்த்து அளிக்கும் கலைக் கோயில்களாயின். சிற்பங்களையும் ஓவியங்களையும், சேர்த்து அளிக்கும் கலைக கோயில்களாயின. சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலைகள் இறைவனின் திருவிளையாடல் போன்ற புராணங்களுடன் இணைந்து அளிக்கும் போது அவை சீர்பெற்று சிறப்படைகின்றன. பார்ப்பவ நெஞ்சம் பரவசமெய்துவதுடன் பக்தியிலும் மூழ்கித் திளைக்கின்றனர். தமிழகத்தில் இவ்வாறான கோயில்கள் பல, தலைச்சிறந்து விளங்குவதை பார்க்கின்றோம். வேலூரிலுள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயமும் அத்தகைய கலைக் கோயில்களில் ஒன்றாகும்.