ட்விட்டர் பயனாளர்களின் அடிமடியில் கை வைத்த எலான் மஸ்க்.
இனி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே ட்விட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும். அதற்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் எலான் மஸ்க்.
ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற பயனாளர்கள் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.
இது ஒரு தற்காலிக முடிவு என அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். கடந்த சில மணி நேரமாக ட்விட்டர் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அறிவிப்பு.