வழக்கறிஞரை தண்ணீர் குடிக்க அனுமதிக்காத விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.!
வழக்கறிஞரை தண்ணீர் குடிக்க அனுமதிக்காத விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.!
மெட்ராஸ் பார் அசோசியேசனில் உறுப்பினராக இல்லாத வழக்கறிஞரை தண்ணீர் குடிக்க அனுமதிக்காத விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மெட்ராஸ் பார் அசோசியேசன் இந்த சங்கத்தின் அலுவலகத்தில், கடந்த 2012ம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரனின் மகனான வழக்கறிஞர் நீல்ரஷன் தண்ணீர் குடிக்க சென்றபோது, மூத்த வழக்கறிஞர் பி.ஹெச்.பாண்டியன் தடுத்துள்ளார்.
இதுகுறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி தலைமை பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, எம்.பி.
ஏ.-வில் பட்டியலின, பழங்குடியின வழக்கறிஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க கோரி வழக்கறிஞர்கள்
ஏ.மோகன்தாஸ், எஸ்.மகாவீர் சிவாஜி ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ((எஸ்.எம்.சுப்பிரமணியம்)), பாதிப்புக்கு உள்ளான மற்றும் புகாருக்கு உள்ளான இரு வழக்கறிஞர்களும் இறந்து விட்டதால், நடந்த சமூக தீமைகள், மடிந்து விடுவது இல்லை என குறிப்பிட்டதுடன், 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.
மேலும், உறுப்பினர்களாக சேர விரும்பும் அனைத்து வழக்கறிஞர்களையும், சாதி, மதம், பொருளாதார நிலை, அரசியல் பாகுபாடுகள் பார்க்காமல் உறுப்பினர்களாக்கும் வகையில் விண்ணப்பம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், உயர்நீதிமன்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள எம்.பி.
ஏ. சங்க அலுவலகத்தை வெளியேற்றி, வேறு ஒரு இடத்தை ஒதுக்குவது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் பார் அசோசியன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்குகள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதி கே.ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது எம்.பி.
ஏ. சார்பில் ,சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ரிட் வழக்கு தொடர முடியாது என்றும், தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூலை 14 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.