10 அவதூறு கேஸ்கள் பெண்டிங்-ராகுல் காந்தி மனுவை டிஸ்மிஸ் செய்த குஜராத் ஹைகோர்ட் சொன்ன 10 பாயிண்டுகள்!
அகமதாபாத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு கீழ்நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்தது சரியானதும் நியாயமானதும் எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி 2019-ல் கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, மோடி எனும் பெயர் கொண்டவர்கள் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்புகிறார்கள் என குறிப்பிட்டார். இது மோடி சமூகத்துக்கு எதிரான அவதூறு என கூறி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
ராகுல் காந்திக்கு இந்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டச்னை விதித்தது சூரத் நீதிமன்றம். இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. தற்போது குஜராத் உயர்நீதிமன்றமும் டிஸ்மிஸ் செய்திருக்கிறது.
ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
1) ராகுல் காந்தி எந்த ஒரு அடிப்படையுமே இல்லாமல் தமக்கு விதிக்கப்பட்ட தண்டயை நிறுத்தி தடை விதிக்க கோருகிறார்
2) ராகுல் காந்தி மீது மேலும் 10 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
3) தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது சட்டமல்ல.. அரிதினும் அரிதா வழக்குகள்தான் விதி விலக்கானவை.
4) அரசியலில் தூய்மை என்பது தேவை.
5) ராகுல் காந்தி மீது வீரசாவர்க்கர் பேரன் புனே நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். அதுவும் நிலுவையில் உள்ளது,
6) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க எந்த ஒரு காரணமுமே இல்லை.
7) ராகுல் காந்திக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனை சரியானதும் சட்டப்படியானதும் கூட.
8) ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை
9) ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்காததாலேயே அவருக்கு அநீதி எதுவும் இழைக்கப்படவும் இல்லை.
10) ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்க நியாயமான காரணங்கள் எதுவுமே இல்லை.