திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் விரைவில் திருமணமாக வேண்டி வழிபட வேண்டிய நிகழ்வு…!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திருந்து அரியலூர் செல்லும் வழியிலுள்ள திருமழப்பாடி
வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சென்று பங்குனி மாதம் நடக்கும் நந்தி கல்யாணத்தை பார்க்கும் அனைவருக்கும் முந்தி கல்யாணம் நடக்கும் என்பார்கள்.
அடுத்த வருடம் நந்தி கல்யாணம் நடப்பதற்க்குள் கல்யாணம் நடக்கும் என்பது ஜதீகம்.
அதில் அனைவரும் கலந்து கொண்டு நந்தியின் அருள் பெற்று விரைவில் திருமணம் நடைபெற
வாழ்த்துக்கள்.
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு.
நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.
அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.
ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் திருமழபாடி திரு சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது
மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்
மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை
இந்த ஸ்தலமானது திருமால் இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலமாகும்.
தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 KM தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. நடராஜர் மண்டபம் அருகில் திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகை யுடன் காட்சி தருகிறார்.
திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது அன்று மாலை திருவையாறு கோயிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.