திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனைகளைச் செலுத்த இயலாதோரும் அந்தப் பிரார்த்தனைகளை தென் திசையில் உள்ள இப்பெருமானிடத்தில் செலுத்தி நிறைவு செய்து வருகின்றனர்” … பற்றி விளக்கும் எளிய கதை 🌹🌺
————————————————————-
🌺🌹வைகுண்ட வாசுதேவன்,குணசீல மகரிஷியின் தவத்தை மெச்சி,ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாகக் காட்சியளித்த அற்புத ஷேத்திரம் குணசீலம்.
🌺இத்திருத்தலத்தில் எம்பெருமான்,ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் நின்ற திருகோலத்தில் காட்சியளிக்கிறார்.
🌺சங்கம்,சக்கரம்,வரதஹஸ்தம்,கடிஹஸ்தத்துடன் திருமார்பில் லட்சுமியைத் தாங்கி சேவை சாதிக்கும் எம்பெருமான்,வலக்கையில் செங்கோல் ஏந்தியிருக்கிறார்.
🌺இச்செங்கோலினாலேயே மனநலக் கோளாறுகளை பெருமாள் நிவர்த்தி செய்வதாக ஐதிகம்.
🌺மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் இத்திருத்தலத்தில் 48 நாட்கள் தங்கி விரத முறைகளை மேற்கொண்டு காவேரி நதியில் நீராடி எம்பெருமானை வழிபட்டால் அவ்வினைகள் யாவும் நீங்குவதாக நம்பிக்கை.
🌺திருப்பதி எம்பெருமானே குணசீல மகரிஷிக்குக் காட்சியளித்ததால் திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனை களைச் செலுத்த இயலாதோரும் அந்தப் பிரார்த்தனைகளை தென் திசையில் உள்ள இப்பெருமானிடத்தில் செலுத்தி நிறைவு செய்து வருகின்றனர்.ஆகவே,தென் திருப்பதி என இத்திருத்தலம் போற்றப்படுவது குறிப்பிடத் தக்கது.
🌺அமைவிடம் திருச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் காவேரி நதியின் அழகிய வடகரையில் அமைந்துள்ளது.
🌺 பாடல் 🌹
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
————————————————-
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺
ஓம் நமோ நாராயணாய 🙏
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook :
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.