வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை செய்ய மறுப்பு. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஒரு மாதமாக சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆஞ்சியோ செய்ய மருத்துவர்கள் கூறவே மருத்துவ காப்பீட்டில் ஆஞ்சியோ செய்ய மருத்துவர்கள் முன்வந்தனர். ஆனால் தற்போது மருத்துவ காப்பீட்டில் மருத்துவம் மேற்கொண்டால் நான்கு மாதங்கள் வரை பணத்திற்காக நாங்கள் (CMC) காத்திருக்க நேரிடுகிறது. எனவே பணம் கட்டினால் உடனே மருத்துவ பார்க்கப்படும் என மருத்துவமனை காப்பீடு துறை அலுவலர்கள் தெரிவித்ததால் நோயாளிகள் செய்வதறியாது திணறல்.
இதைப் போன்று முறையாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பணம் வந்து சேராததால் பலர் காப்பீடு அட்டை இருந்தும் பயன்பெறாத நிலையில் உள்ளனர்.