தபால்துறையின் ஒருபகுதியாக செயல்பட்டு வரும் ஐபிபிபியில் காலியாக உள்ள இன்பர்மேஷன் டெக்னாலஜி எக்ஸிக்கியூட்டிவ்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
இந்தியாவில் தபால் துறை என்பது மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த தபால்துறையின் ஒரு பகுதியாக ஐபிபிபி (IPPB)எனும் India Post Payments Bank செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஐபிபி வங்கியில் எக்ஸிக்கியூட்டிவ் (அசோசியேட் கன்சல்டன்ட்) பணிக்கு 28 பேர், எக்ஸிக்கியூட்டிவ் (கன்சல்டன்ட்) பணிக்கு 21 பேர், எக்ஸிக்கியூட்டிவ் (சீனியர் கன்சல்டன்ட்) பணிக்கு 5 பேர் என மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் 6 பிரிவுகளில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் பணிமயர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு: இதில் எக்ஸிக்கியூட்டிவ் (அசோசியேட் கன்சல்டன்ட்) பணிக்கு ஓராண்டு அனுபவத்துடன் 22 முதல் 30 வயதுக்குள்ளும், எக்ஸிக்கியூட்டிவ் (கன்சல்டன்ட்) பணிக்கு 4 ஆண்டு அனுபவத்துடன் 22 முதல் 40 வயதுக்குள்ளும், எக்ஸிக்கியூட்டிவ் (சீனியர் கன்சல்டன்ட்) பணிக்கு 6 ஆண்டு அனுபவத்துடன் 22 முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.|
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சியன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எம்சிஏ, பிசிஏ படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதோடு செல்போன் செயலி தொடர்பான அறிவை பெற்றிருக்க வேண்டும் எனஅதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: எக்ஸிக்கியூட்டிவ் (அசோசியேட் கன்சல்டன்ட்) பணிக்கு ஆண்டுக்கு ரூ.10லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். எக்ஸிக்கியூட்டிவ் (கன்சல்டன்ட்) பணிக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரையும், எக்ஸிக்கியூட்டிவ் (சீனியர் கன்சல்டன்ட்) பணிக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டு வரை வேலையில் அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு தேவையென்றால் 2 ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யப்படும். பணி நீட்டிப்பு என்பது ஒவ்வொருவரின் செயல்பாட்டை பொறுத்து மட்டுமே அமையும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 24ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் https://ippbonline.com எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Thanks to Oneindia tamil