உத்தரப்பிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் மருத்துவர் தம்பதி. இந்த பெண் மருத்துவர் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து பெண் மருத்துவர் வாழ்ந்து வருகிறார். ஆனால், இருவரும் விவாகரத்து செய்யவில்லை.
இந்நிலையில் அந்த பெண் மருத்துவர் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் 2 பேருடன் அந்த பெண் மருத்துவர் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அறிந்த கணவர் நள்ளிரவில் நேராக ஓட்டலுக்கு சென்று மனைவி தங்கி இருந்த அறையை தட்டியுள்ளார். கதவை திறந்ததும் உள்ளே சென்ற கணவர் மனைவி இரண்டு ஆண்களுடன் இருப்பதை கண்டு ஆவேசம் அடைந்து தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மருத்துவர் மற்றும் பெண் மருத்துவர் அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.