ராஜமகேந்திரவரத்தில் ‘ஸ்கில் இந்தியா சர்வதேச மையம்’: ஆந்திர அரசு ஒப்பந்தம்
இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆந்திரப் பிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாக, ராஜமகேந்திரவரம் பொம்முருவில் உள்ள NAC–மேம்பட்ட திறன் பயிற்சி நிறுவனத்தில் (ASTI) ‘ஸ்கில் இந்தியா சர்வதேச மையம்’ (SIIC) அமைக்க, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடன் (MSDE) ஆந்திரப் பிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
MSDE செயலர் தேபஸ்ரீ முகர்ஜி முன்னிலையில், அமைச்சகத்தின் துணைச் செயலர் இந்து பூஷண் லென்கா மற்றும் ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (APSSDC) செயல் இயக்குநர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சர்வதேசத் தரத்திலான திறன் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதே இந்த மையத்தின் நோக்கம்.