ஹைதராபாத்தில் ஆப்பிளின் முதல் ஸ்டோர் டிசம்பர் 10 அன்று திறப்பு: இந்தியாவில் ஏழாவது
ஹைதராபாத் லேக் ஷோர்-Y ஜங்ஷன் மாலில் ‘ஆப்பிள் குகட்பள்ளி’ ஸ்டோர் டிசம்பர் 10 அன்று திறக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஹைதராபாத்தில் தனது முதல் ஸ்டோரான ‘ஆப்பிள் குகட்பள்ளி’யை, லேக் ஷோர்-Y ஜங்ஷன் மாலில் டிசம்பர் 10 அன்று திறக்க உள்ளது. இது இந்தியாவில் ஆப்பிளின் ஏழாவது சொந்த விற்பனை நிலையம்.
இந்தியாவின் பெரிய நகரங்களைக் குறிவைத்து ஆப்பிள் தனது சில்லறை விற்பனையை விரிவுபடுத்தி வருகிறது. புதிய ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் தயாரிப்புகளை நேரடியாகப் பார்த்து வாங்கலாம்; சேவை மற்றும் உதவியையும் பெறலாம்.
ஹைதராபாத்தில் ஆப்பிளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் செயல்படுகிறது. சென்னையில் ஆப்பிள் ஸ்டோர் எப்போது திறக்கப்படும் என்பது தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.