பறவைக் காய்ச்சல் தாக்கம்: ஏற்றுமதி முடக்கத்தால் 8-10 நாள்களில் முட்டை விலை 20% வரை சரிவு
நாட்டின் முட்டை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவலால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, முட்டை விலை 10% – 20% வரை சரிந்துள்ளது.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதால் ஏற்றுமதி முடங்கி, கடந்த 8 – 10 நாள்களில் முட்டை விலை 10% முதல் 20% வரை சரிந்துள்ளது. இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் 90%-க்கும் மேல் தமிழகத்தின் பங்கு என்பதால், இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
ஏற்றுமதிக்குச் செல்ல வேண்டிய உபரி முட்டைகள் உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பப்படுகின்றன. ஏற்கனவே தென் மாநிலங்களில் பருவகாலத் தேவை குறைந்து வரும் நேரத்தில் இது நிகழ்வதால், பண்ணை விலைகள் சரிந்துள்ளன. மறுபுறம், தீவனச் செலவு 30% – 50% உயர்ந்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் இரட்டை அழுத்தத்தைச் சந்திக்கின்றனர்.
நாமக்கல் போன்ற கோழிப் பண்ணை மையங்களின் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படக்கூடும். நன்கு வேகவைத்த முட்டை, கோழி இறைச்சி உண்பது பாதுகாப்பானது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.