வங்கதேச அமைதியின்மை: சுமார் $254 மில்லியன் ஆடை ஆர்டர்கள் இந்தியா நோக்கி திரும்பின
தொழிலாளர் போராட்டங்கள், அதிகரிக்கும் செலவுகள் காரணமாக, ஸாரா, H&M உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகள் நவம்பர் முதல் பாதியில் வங்கதேசத்திலிருந்து ஆர்டர்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றியுள்ளன.
ஸாரா, H&M உள்ளிட்ட உலகளாவிய ஆடை நிறுவனங்கள், நவம்பர் முதல் பாதியில் தங்கள் மாதாந்திர ஆர்டர்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கை வங்கதேசத்திலிருந்து பிற ஆசிய உற்பத்தி மையங்களுக்கு மாற்றியுள்ளதாக மூன்று தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 1 முதல் 18 வரை சுமார் $254 மில்லியன் மதிப்பிலான ஆர்டர்கள் வங்கதேசத்திலிருந்து திருப்பிவிடப்பட்டன; அவற்றில் பெரும்பாலானவை அண்டை நாடான இந்தியாவுக்கு வந்துள்ளன. தொழிலாளர் போராட்டங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டதும், உயரும் செலவுகள் போட்டித்திறனைக் குறைத்ததும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
திருப்பூர் போன்ற தமிழ்நாட்டு ஆடை ஏற்றுமதி மையங்களுக்கு இது கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் எனத் தொழில்துறையினர் கருதுகின்றனர்.