பட்டினி கிடந்து உயிர்விட தூண்டிய வழக்கு: கென்யா மதத் தலைவர் மெக்கென்சி 123 பேரின் மரணத்துக்குக் குற்றவாளி
‘இயேசுவைச் சந்திக்க’ உண்ணாவிரதம் இருந்து உயிர்விடுமாறு தூண்டிய வழக்கில், கென்யாவின் பால் மெக்கென்சி 123 பேரின் மரணத்துக்குக் குற்றவாளி என மொம்பாசா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கென்யாவின் குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் நிறுவனரும் போதகருமான பால் மெக்கென்சி, தனது ஆதரவாளர்களில் 123 பேரின் மரணத்துக்குக் காரணமான கொலைக் குற்றமல்லாத மரணம் விளைவித்தல் (manslaughter) குற்றச்சாட்டில் நவம்பர் 27 அன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
‘இயேசுவைச் சந்திப்பதற்காக’ உயிர் போகும் வரை உண்ணாவிரதம் இருக்குமாறு ஆதரவாளர்களைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடலோர நகரமான மொம்பாசாவில் நடைபெற்ற விசாரணையில், அவரது மனைவி ரோடா மும்புவா உள்ளிட்ட 29 ஆதரவாளர்களும் அவருடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோரின் மரணம் தொடர்பாக மெக்கென்சிக்கு எதிராக வழங்கப்பட்டு வரும் தொடர் தீர்ப்புகளில் இது சமீபத்தியது.