ஆந்திராவில் கியாவின் இரண்டாவது ஆலை: 2 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு ஒப்பந்தம்
அனந்தபூரில் 465 ஏக்கரில் ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது ஆலை அமைக்க கியா இந்தியா – ஆந்திர அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கியா இந்தியா நிறுவனம், ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் இரண்டாவது உற்பத்தி ஆலை அமைக்க சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹18,790 கோடி) முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநில அரசுடன் கையெழுத்திட்டுள்ளது.
465 ஏக்கரில் அமையும் புதிய ஆலை, ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும். 945 ஏக்கரில் உள்ள தற்போதைய அனந்தபூர் ஆலையின் 4.3 லட்சம் திறனுடன் சேர்த்து, மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் சுமார் 6 லட்சமாக உயரும்.
பெட்ரோல்/டீசல் (ICE) மற்றும் மின்சார மாடல்கள் இரண்டும் இங்கு தயாரிக்கப்பட்டு, உள்நாட்டுச் சந்தைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக ஆந்திரா – தமிழ்நாடு பகுதி வளர்ந்து வருவதை இது காட்டுகிறது.