லாட்வியா வான்பரப்பில் ட்ரோன் ஊடுருவல்: நேட்டோ போர் விமானங்கள் விரைவு
ரஷ்ய எல்லை அருகே லாட்வியா வான்பரப்பில் ட்ரோன் ஒன்று சிறிது நேரம் நுழைந்ததை அடுத்து, நேட்டோ போர் விமானங்களும் இடைமறிக்கும் ட்ரோனும் அனுப்பப்பட்டன.
ரஷ்யாவுடனான எல்லை அருகே லாட்வியா வான்பரப்பில் ட்ரோன் ஒன்று சிறிது நேரம் நுழைந்ததைத் தொடர்ந்து, இரவோடு இரவாக நேட்டோ போர் விமானங்களும் ஓர் இடைமறிக்கும் ட்ரோனும் அனுப்பப்பட்டதாக லாட்வியா ராணுவம் நவம்பர் 27 அன்று தெரிவித்தது.
பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததிலிருந்து, போர் நடைபெறும் பகுதிக்கு அருகிலுள்ள பல நாடுகள் ட்ரோன், ஏவுகணை ஊடுருவல்கள் மற்றும் விழுந்து நொறுங்கிய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டு மட்டும், பால்டிக் நாடுகளின் வான்பரப்பைப் பாதுகாக்கும் நேட்டோ போர் விமானங்களால் லாட்வியா மீது இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.