சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘பிக்காசோ’: முதல் பாடல் ‘ஹகுனா மட்டாட்டா’ வெளியீடு
இயக்குநர் கௌதம் சிவராமனின் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடலை நடிகர் சூரி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்; லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில், கன்னட நட்சத்திரம் சிவராஜ்குமாரும் தமிழ் நடிகர் – இயக்குநர் அபிஷன் ஜீவிந்தும் முன்னணி வேடங்களில் நடிக்கும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடலான ‘ஹகுனா மட்டாட்டா’ நவம்பர் 27 அன்று வெளியானது.
நடிகர் சூரி இந்தப் பாடலைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வேகமான இந்தப் பாடலை படத்தின் நாயகன் அபிஷன் ஜீவிந்தே பாடியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, தமிழ் ஆதவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
டிராமா கம்பெனி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்டில் நிறைவடைந்தது.