‘மகாராஜா’ பார்த்த டாம் ஹாங்க்ஸ்: சச்சனா நமிதாஸின் நடிப்புக்குப் பாராட்டு
விஜய் சேதுபதியின் 2024 தமிழ் த்ரில்லர் ‘மகாராஜா’வைப் பார்த்த ஹாலிவுட் நட்சத்திரம் டாம் ஹாங்க்ஸ், இளம் நடிகை சச்சனா நமிதாஸை ‘அற்புதமான நடிகை’ எனப் பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த 2024-ஆம் ஆண்டு தமிழ் த்ரில்லர் ‘மகாராஜா’ படத்தைப் பார்த்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அதில் நடித்த இளம் நடிகை சச்சனா நமிதாஸின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.
படத்தைப் பார்த்துப் பல மாதங்களுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற ஒரு விழாவில் டாம் ஹாங்க்ஸ் சச்சனாவின் நடிப்பு குறித்துப் பேசியதாக, சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாரிய உறுப்பினர் கவிதா குப்தா தெரிவித்தார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்தார்.
நித்திலன் சாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’, ஓடிடி தளத்தில் வெளியான பிறகு உலகளவில் பரவலான கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.