OnePlus 12 மொபைல் எப்படி இருக்கிறது ? விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
பல மாத எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஒருவழியாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 5ஜி மொபைலான OnePlus 12 அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஒன்பிளஸ் அதன் இந்த ஃபிளாக்ஷிப் பிரீமியம் ஸ்மார்ட்னை அதன் சொந்த நாட்டில் (சீனாவில்) சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் 4,500 nits பீக் பிரைட்னஸை சப்போர்ட் செய்யும் 2K LTPO AMOLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. OnePlus 11-ன் அப்கிரேட்டட் வெர்ஷனாக பார்க்கப்படும் இந்த புதிய மொபைல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், பெரிய பேட்டரி, சிறந்த தரமான டிஸ்ப்ளே மற்றும் பல அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய OnePlus 12-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்…
விலை விவரங்கள்:
தற்போது இந்த மொபைல் சீனாவில் ப்ரீ -ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த மொபைலின் பேஸ் வேரியன்ட்டான 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைலின் விலை சீனாவில் 4,299 Yuan-ஆக (இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.50,700) உள்ளது.
மேலும் இந்த மொபைல் 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஆகிய வேரியன்ட்ஸ்களிலும் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முறையே CNY 4,799 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.56,600) மற்றும் CNY 5,299 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.62,500)-ஆக உள்ளது.
இந்த மொபைல் லீவ் பிளாங்க் (வெள்ளை), பச்சை மற்றும் Iwaguro (கருப்பு) உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:
இந்த டூயல் நானோ சிம் சப்போர்ட் கொண்ட ஒன்பிளஸ் 12 மொபைலானது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ColorOS 14-ல் இயங்குகிறது. இந்த மொபைலின் 6.82-இன்ச் குவாட்-எச்டி+ (1,440 x 3,168 பிக்சல்ஸ்) LTPO OLED டிஸ்ப்ளேவானது 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டது. இந்த புதிய டிவைஸானது டால்பி விஷன், HDR 10+ மற்றும் HDR Vivid உள்ளிட்டவற்றுக்கான சப்போர்ட்டை கொண்டிருக்கிறது.
தவிர OnePlus 12 மொபைல் டிஸ்ப்ளேவானது DisplayMate-லிருந்து A+ சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சர்டிஃபிகேட் மொபைல் டிஸ்ப்ளே, சிறந்த கலர் அக்யூரஸி மற்றும் பிரைட்னஸை கொண்டிருக்கும் என்பதை குறிக்கிறது. OnePlus 12 மொபைலில் Qualcomm நிறுவனத்தின் புதிய மற்றும் லேட்டஸ்ட் ப்ராசஸரான Snapdragon 8 Gen 3 கொடுக்கப்பட்டுள்ளது. இது LPDDR5X RAM மற்றும் UFS 4.0 ROM ஸ்டோரேஜ் சொல்யூஷன் சப்போர்ட்டை கொண்டிருக்கிறது.
100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்ய கூடிய 5,400mAh பேட்டரி பேக் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் இந்த மொபைலை பயன்படுத்தினாலோ அல்லது கேம் விளையாடினாலோ டிவைஸ் சூடாகாமல் இருக்க பெரிய கூலிங் சிஸ்டம் இதில் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. கேமரா என்று பார்த்தால் இந்த மொபைல் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கிறது.
இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி LYT808 Sony சென்சார், 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் 64-மெகாபிக்சல் OV64B சென்சார், 48 மெகாபிக்சல் IMX581 அல்ட்ரா-வைட் கேமரா உள்ளிட்டவை அடங்கும்.
செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இந்த பிரீமியம் ஃபோனில் 32எம்பி ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்ட பல அடங்கும்.
OnePlus 12 மொபைலானது டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த மொபைலின் மொத்த எடை 220 கிராம் ஆகும்.