தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோடைகாலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் விதமாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி கிளைத்தலைவர் அகமது அலி ரஜாய் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் முகம்மது பாஸித், மாநில செயற்குழு உறுப்பினர் பீர்மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கிளை மமக செயலாளர் ஜெய்னுலாப்தீன்,
தமுமுக செயலாளர் மைதீன் அப்துல்காதிர்,
பொருளாளர் ஜாகிர் உசேன்,
ஒன்றிய தலைவர் மகுதண்ணன்,
ஒன்றிய செயலாளர் முகமது கனி,
துணை செயலாளர்கள் கமால்தீன், அமீன், அன்வர் சாதிக்அலி, அப்துல்ரஹிம், இளைஞர் அணி செயலாளர் ஜாபர்அலி, தொண்டரணி செயலாளர் தவ்பீக், அலியார் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி வழங்கப்பட்டது.