வேலூர் செப்டம்பர் 22 திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்காண வாள் சண்டை போட்டி திருவண்ணாமலை அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள O M S Sports Academy-யில் பயிற்சி பெற்ற, B M D Jain பள்ளி மாணவன் EG. ராம்சரண் தர்ஷன்,17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார் இதில் EG. ராம்சரண் தர்ஷன், 3-ம் இடம்பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக வாள் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவன் EG. ராம்சரண் தர்ஷன், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன், மற்றும் ஓ எம் எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சி தலைவர் லோகு ராவ் பயிற்சியாளர் விக்னேஷ் ராவ் மற்றும் பலர் வாழ்த்தி பாராட்டி தெரிவித்தனர்.