வேலூர் மாநகராட்சி உட்பட்ட சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே விக்னேஸ்வர் நகரில் குடிநீர் செல்லும் குழாய் அருகே , குப்பையும் கழிவுநீர் கலப்பு.
சத்துவாச்சாரிடபுள் ரோடு, பகுதி 3, விக்னேஸ்வர் நகரில் குடிநீர் செல்லும் வழியில் குப்பை கலப்பதால், பொது மக்கள் பெரிதும் அவதிக்குள் ஆகின்றனர். இதனால் நோய்த்தொற்றும் ஏற்படுகிறது, கொசு மற்றும் பூச்சிகளும் பரவும் அவலம் ஏற்படுகிறது. கோடையிலும் டெங்கு பரவல் பற்றி அரசு பல முன்னயேற்பாடுகளை செய்து வருவது, நாம் தினமும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் இதை உதாசீன படுத்திவருகிறார்கள். இது கடந்த பல மாதங்களா நடைபெற்று வருகிறது, இதை பற்றி, பலரும் தெரிவித்தும், எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது, அங்குள்ள பொது மக்களின் கோரிக்கையாகும்.