பாக்கெட் உணவுகளில் சிவப்பு எச்சரிக்கை லேபிள்: 4 மாதத்தில் விதிகளை இறுதி செய்ய FSSAI-க்கு உச்ச நீதிமன்றம் கெடு
சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு அல்லது உப்பு அதிகமுள்ள பாக்கெட் உணவுகளின் முன்புறத்தில் தெளிவான சிவப்பு எச்சரிக்கை லேபிள் கட்டாயமாக்கும் விதிகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆரோக்கியத்துக்கான உரிமை, பொதுச் சுகாதாரத்துக்குத் தீங்கான தொழில் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் கடமையை அரசுக்கு அளிக்கிறது எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், நவம்பர் 26 அன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு அல்லது உப்பு அதிகமுள்ள பாக்கெட் உணவுகளில் முக்கியமான சிவப்பு எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் ஒற்றைக் கட்ட ‘முன்புற ஊட்டச்சத்து லேபிள்’ (FoPNL) முறையை வகுக்குமாறு FSSAI-க்கு அது உத்தரவிட்டது.
இதற்கான விதிகளை நான்கு மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. மொத்த சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு, உப்பு ஆகியவற்றை ‘கவலைக்குரிய ஊட்டச்சத்துகள்’ எனக் குறிக்கும் தரப்படுத்தப்பட்ட அறுகோண லேபிள்கள் இடம்பெற வேண்டும்.
உணவு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பேக்கேஜிங்கை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்; நுகர்வோர் ஆரோக்கியமான தேர்வுகளை எளிதாகச் செய்ய இது உதவும்.